இலங்கை செய்தி

காணி விடுவிப்பு: வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று (15.06.2026) ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக […]

ஐரோப்பா செய்தி

எரிசக்தி நெருக்கடி தீரும்: EU நம்பிக்கை!

  • June 15, 2026
  • 0 Comments

  அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த ஆழமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதோடு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தணிக்க உதவும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Kaja Kallas குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது உலகப் பொருளாதாரத்திற்கும் பிராந்திய நிலைத்தன்மைக்கும் மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க […]

செய்தி விளையாட்டு

T -20 தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது மே.தீவுகள்!

  • June 15, 2026
  • 0 Comments

இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதி T – 20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது. ஷமார் ஜோசப் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தில்!

  • June 15, 2026
  • 0 Comments

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் எல்லாப் பக்கங்களிலும் சிக்கலில் உள்ளது. ஒருபுறம் பொருளாதார மந்தநிலையும், மறுபுறம் மனித உரிமை மீறல்களும் உள்ளன. முன்னாள் படையினர் ஒடுக்கப்படுவதை நம்மால் காண முடிகிறது, அதே நேரத்தில் […]

ஐரோப்பா

செல்வந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக அணிதிரண்ட மக்கள்!!

  • June 15, 2026
  • 0 Comments

பிரான்ஸில்  G7  உச்சிமாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் செல்வந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains)  என்ற சுற்றுலா நகரில் இன்று G7  உச்சிமாநாடு ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய கிழக்கு போர், உக்ரைன் மற்றும் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள். உலக நாடுகளின் தலைவர்கள் எவியானுக்குச் செல்வதற்கு முன்பு […]

ஐரோப்பா செய்தி

ராணுவ நிதிப் போர்: பிரிட்டன் அரசுக்குள் சர்ச்சை!

  • June 15, 2026
  • 0 Comments

பிரிட்டனின் புதிய பாதுகாப்புச் செயலர் டான் ஜார்விஸ், நாட்டின் ராணுவச் செலவினத் திட்டங்களை மறுஆய்வு செய்து கூடுதல் நிதியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நிதி அமைச்சை மீண்டும் அணுகக்கூடும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் சில முக்கிய அம்சங்களுக்குப் புதிய அமைச்சர் ஜார்விஸ் முன்னுரிமை அளிக்கவுள்ளதாகப் அரச  தரப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜான் ஹீலி  தனது […]

ஐரோப்பா

உக்ரைனின் பாரம்பரிய மடாலயம் மீது தாக்குதல் – 04 பேர் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார பகுதியான பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களை அவசரமாக வெளியேறுமாறு  உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1051-ல் நிறுவப்பட்ட, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, மத்திய கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் நேரடித் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தது என்று தலைநகரின் […]

உலகம் செய்தி

ஆசிய சந்தையில் சரிந்தது எண்ணெய் விலை!

  • June 15, 2026
  • 0 Comments

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள் கிழமையன்று ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சர்வதேச தரக்குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 4.8 சதவீதம் சரிந்து, ஒரு பேரல் 83.18 டாலராகக் குறைவடைந்துள்ளது. அமெரிக்க சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சதவீதம் சரிந்து, ஒரு பேரல் 80.13 டாலராக வர்த்தகமானது. கடந்த பெப்ரவரி மாதம் மாதம் போர் […]

உலகம்

பிரேசிலில் நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள் – 06 பேர் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

பிரேசிலில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரியோ டி ஜெனிரோவின் மேற்கு புறநகர்ப் பகுதியான ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ் ( Recreio dos Bandeirantes ) என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் அமெரிக்க ஆல்ட்-பாப் பாடகரும் இணையப் பிரபலமுமான ஆலிவர் ட்ரீ உள்ளிட்ட   06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை இன்னும் முறையாக அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஹெலிகாப்டர்கள் மின்சார கார்கள் நிறுத்தும் இடத்தில் விழுந்தமையால் 20 […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம்: உலக தலைவர்கள் மகிழ்ச்சி!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த உடன்படிக்கையானது பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்று ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடல்சார் வணிகப் போக்குவரத்து சீரடையும் என்றும், உலகப் பொருளாதாரச் சூழல் மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தும் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், இது சர்வதேசப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் ஒரு […]