படைகளை மீளப்பெற இஸ்ரேல் மறுப்பு: மீண்டும் பரபரப்பு!
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் படைகளை தொடர்ந்து தக்க வைக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிப்பதே தங்களின் முதன்மை இலக்கு என அவர் விளக்கியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட்டால் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





