இலங்கை

கோட்டாவின் ரிட் மனு தொடர்பில் நாளை விசாரணை

  • June 17, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நாளைய  (18) தினம் விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி,  ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன்பாக இந்த மனு இன்று விசாரிக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மைகளை உறுதி செய்வதற்காக இந்த மனுவை நாளை விசாரிக்குமாறு […]

அரசியல் இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெகவுடன் சங்கமிக்கிறார் விஜயபாஸ்கர்

  • June 17, 2026
  • 0 Comments

அதிமுகவின் AIADMK சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த, சி.விஜயபாஸ்கர், C. Vijayabaskar தவெகவில் TVK இணையவுள்ளார் என தெரியவருகின்றது. எதிர்வரும் 22-ம் திகதி நடைபெறும் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவின்போது அவர் தவெகவுடன் சங்கமிப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10 ஆம் திகதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 13 ஆம் திகதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், […]

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் சகோதரரான பஸில் ராஜபக்ச ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர். அரசியல் இலங்கை செய்தி

அடுத்து என்ன? ராஜபக்சக்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு

  • June 17, 2026
  • 0 Comments

அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “பஸில் ராஜபக்சவின் ஆசிர்வாதம் எமது கட்சிக்கு என்றும் உள்ளது. ஆனால் அவர் செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி கூற முடியாது. மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர், அரசியலை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க பார்க்கின்றனர். இதற்கமையவே நாம் புதிய அமைப்பாளர்கள், தலைவர்களை […]

இந்தியா

இந்தியாவில் இருமல் மருந்துகளை வாங்குவோருக்கு எச்சரிக்கை – பற்றுச்சீட்டு அவசியம்

  • June 17, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கம் இருமலுக்கான மருந்துகளை வாங்கும்போது மருத்துவரின் பற்றுச்சீட்டு அல்லது பரிந்துரை சீட்டு  காண்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்திய பல குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருந்து இருமல் மருந்துகளை நீக்குவதற்காக சுகாதார அமைச்சகம் விதிகளைத் திருத்தியுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன. பல நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளே காரணம் […]

ஐரோப்பா செய்தி

கட்டுக்குள் வந்த பிரித்தானியாவின் பணவீக்கம்

  • June 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பணவீக்கம் மே மாதத்தில் 2.8 சதவீதம் என்ற அளவில் சீராக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்த போதிலும், உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டாலும், அரசின் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவிற்கு கைகொடுத்துள்ளன என்பதை இது வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், எண்ணெய் விலையை குறைத்து வரும் காலங்களில் பொருளாதார […]

இலங்கை

”நிர்வாணமாக்கப்பட்டு சோதனை” – சுரேஷ் சலேவின் மனைவி குற்றச்சாட்டு

  • June 17, 2026
  • 0 Comments

முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சல்லே காவலில் இருந்தபோது நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை குற்றப் புலனாய்வுத் துறை ஒப்புக்கொண்டுள்ளதாக அவரின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். சுரேஷ் சலேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சுரேஷ் தொடர்ந்து உண்பதோ குடிப்பதோ இல்லை. அவர் நோன்பை முறிப்பதில்லை. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவர் மேலும் மேலும் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தமும், சில சர்ச்சைகளும்

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் குறித்த சில சிக்கலான விடயங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒப்பந்தம் குறித்த உரை  விரைவில் வெளியிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த இடைக்கால ஒப்பந்தம், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையற்ற போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பதுடன்,   ஹோர்முஸ் ஜலசந்தியையும் மீண்டும் திறக்கும். தெஹ்ரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என்று ஒப்பந்தத்தின் உரை […]

இலங்கை செய்தி

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை-யாழில் இருவர் கைது

  • June 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் இருவர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது […]

இந்தியா செய்தி

தற்கொலைப்படை ட்ரோன்களை தயாரிக்கும் இந்தியா

  • June 17, 2026
  • 0 Comments

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்கான விலை மனு கோரலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. நிலையான இறக்கைகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய ஆளில்லா வான்வழி அமைப்புகள்தான தற்கொலைப்படை ட்ரோன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படையின் 5-வது பேஸ் ரிப்பேர் டெப்போ (பிஆர்டி) ஒருங்கிணைக்கும் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பத் தேவைகளின்படி, இந்த ட்ரோன் 16,000 அடி உயரம் […]

இலங்கை செய்தி

பசில் ராஜபக்ச கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

  • June 17, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை சட்டவிரோதச் சொத்துக்கள் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதி முறைகேடு வழக்கில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 14ஆம் […]