அரசியல் இலங்கை செய்தி

அடுத்து என்ன? ராஜபக்சக்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு

அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“பஸில் ராஜபக்சவின் ஆசிர்வாதம் எமது கட்சிக்கு என்றும் உள்ளது. ஆனால் அவர் செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி கூற முடியாது.

மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர், அரசியலை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க பார்க்கின்றனர்.

இதற்கமையவே நாம் புதிய அமைப்பாளர்கள், தலைவர்களை நியமித்துவருகின்றோம்.”எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை