இலங்கை செய்தி

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை-யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் இருவர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ,அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை