தவெகவுடன் சங்கமிக்கிறார் விஜயபாஸ்கர்
அதிமுகவின் AIADMK சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த, சி.விஜயபாஸ்கர், C. Vijayabaskar தவெகவில் TVK இணையவுள்ளார் என தெரியவருகின்றது.
எதிர்வரும் 22-ம் திகதி நடைபெறும் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவின்போது அவர் தவெகவுடன் சங்கமிப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10 ஆம் திகதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து 13 ஆம் திகதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேரவைத் தலைவரை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த விஜய பாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பேரவைத் தலைவரும் அறிவித்துள்ளார்.
விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ.க்களின் பலம் 42 ஆகக்குறைந்துள்ளது. தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந் துள்ளது.





