ஐரோப்பா செய்தி

கட்டுக்குள் வந்த பிரித்தானியாவின் பணவீக்கம்

பிரித்தானியாவின் பணவீக்கம் மே மாதத்தில் 2.8 சதவீதம் என்ற அளவில் சீராக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்த போதிலும், உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டாலும், அரசின் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவிற்கு கைகொடுத்துள்ளன என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், எண்ணெய் விலையை குறைத்து வரும் காலங்களில் பொருளாதார சுமையை குறைக்க உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட நிதிச் செயலாளர், Rachel Reeves,

“மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளவில் விலைகளை உயர்த்தினாலும், நமது சரியான பொருளாதாரத் திட்டத்தால் நாட்டின் பணவீக்கம் சீராக வைக்கப்பட்டுள்ளது. ” என்றார்.

அரசாங்கத்தின் 10 ஆண்டுகால பிணைப்பத்திரங்களின் (Government Bond) வட்டி விகிதம் புதன்கிழமை காலையில் 4.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஒரு மாதத்தில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.

எனினும், தற்போதைய பணவீக்க விகிதமானது பிரித்தானிய மத்திய வங்கி இலக்கு வைத்துள்ள 2 சதவீதத்தை விட அதிகமாகவே உள்ளது.

நாளை (வியாழக்கிழமை) வட்டி விகிதங்கள் குறித்து மத்திய வங்கி முடிவெடுக்க உள்ள நிலையில், சந்தை நிலவரங்களின்படி வட்டி விகிதங்கள் தற்போதைக்கு 3.75 சதவீதத்திலேயே மாற்றமின்றி நீடிக்கும் எனப் முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி