இலங்கை

”நிர்வாணமாக்கப்பட்டு சோதனை” – சுரேஷ் சலேவின் மனைவி குற்றச்சாட்டு

முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சல்லே காவலில் இருந்தபோது நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை குற்றப் புலனாய்வுத் துறை ஒப்புக்கொண்டுள்ளதாக அவரின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சுரேஷ் தொடர்ந்து உண்பதோ குடிப்பதோ இல்லை. அவர் நோன்பை முறிப்பதில்லை. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவர் மேலும் மேலும் உடல்நலம் குன்றி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். 

ஊசிக்குழாயால் (cannula) அவரது கைகள் எல்லாம் வீங்கிவிட்டன, அதனால் அதை அகற்றிவிட்டு, இப்போது அவருக்கு ஒன்றை பொருத்தி, கொஞ்சம் கொஞ்சமாக திரவங்களைக் கொடுத்து வருகிறார்கள். இப்படித்தான் மருத்துவர்கள் எப்படியோ அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.” என்றார்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்