இந்தியா செய்தி தமிழ்நாடு

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு?

  • May 6, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (06) இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றிக் கழக தரப்பில் இருந்து ஆதரவு கோரப்பட்டிருந்த நிலையிலேயே, அவசர கூட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை, காங்கிரசும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி!

  • May 6, 2026
  • 0 Comments

” மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை. எமது வெற்றி களவாடப்பட்டது. எனவே, நான் ராஜினாமா செய்யப் போவதில்லை.” – இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது கருத்து […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆளுநர் அழைப்பு: முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார் என தெரியவருகின்றது. ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பதவியேற்பு நிச்சயம் நடக்கும் என தெரிகின்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ‘மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்’ ஆகிய 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் […]

செய்தி விளையாட்டு

playoff சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சென்னை!

  • May 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, தலைவர் […]

இலங்கை செய்தி

‘நிதி அமைச்சின் செயலாளர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை’

  • May 6, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார். ஹர்ஷன சூரியப்பெரும இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமைகளை பெற்றிருந்தாரா என்பது குறித்தும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது தனது ஆஸ்ரேலிய குடியுரிமையை முறையாகத் துறந்தாரா அல்லது துறப்புக்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்தாரா என்பது குறித்தும் அண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட ஊடகத்துறைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, […]

உலகம்

“Project Freedom” திட்டம் நிறுத்திவைப்பு : ட்ரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு!

  • May 6, 2026
  • 0 Comments

ஈரானுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு உடன்படிக்கைக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்’ ( (Project Freedom)) நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகை தொடரும் என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் உட்பட தலையிடும் நாடுகளின் கோரிக்கைகளையும், தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு […]

இலங்கை

சிறப்பு மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொது கலந்தாய்வு!

  • May 5, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு நாளை (06) நடைபெறும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கிறது. அதன்படி, இது தொடர்பாக வாய்மொழிக் கருத்துக்கள் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை பெறப்படும். இந்தப் பொது கலந்தாய்வானது, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு […]

உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் மீது இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!

  • May 5, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது. ஈரான் ஏவும் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகம் இடைமறித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், அமெரிக்கா மோதலை நாடவில்லை என்று கூறியபோதிலும், ஈரான் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்தால் அதற்கு எதிராக ‘கடுமையான படைபலம்’ பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.  

ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பைச் சேர்ந்த நால்வர் குற்றவாளிகளாக அறிவிப்பு!

  • May 5, 2026
  • 0 Comments

பிரிஸ்டலில் (Bristol) உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் இங்கிலாந்து தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக, பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். சார்லட் ஹெட் (Charlotte Head), சாமுவேல் கார்னர் (Samuel Corner), லியோனா காமியோ (Leona Kamio) மற்றும் ஃபாத்திமா ராஜ்வானி (Fatema Rajwani ) ஆகிய நால்வரும் ஆகஸ்ட் 6, 2024 அன்று, எல்பிட் சிஸ்டம்ஸ் தொழிற்சாலைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தனர். மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும்  […]

உலகம் செய்தி

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம் வெற்றி பெற விரும்புவதால், ஈரானின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், நிதித்துறைச் செயலாளர் Scott Bessent இதுவரை இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ஈரானின் நாணய மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பணவீக்கம் சுமார் 150% வரை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். […]