இந்தியா

அதி நவீன ஏவுகணை கொள்வனவு : இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்!

  • May 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடன் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒந்த ஒப்பந்தப்படி R-37M  ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் 300 ஏவுகணைகளை உள்ளடக்கியது, இதன் மதிப்பு ஏறத்தாழ 1.2 பில்லியன் டொலர் ஆகும். இந்த ஏவுகணைகள் இந்தியாவின் எஸ்யு-30எம்கேஐ (Su-30MKI) போர் விமானங்களில் பொருத்தப்படவுள்ளன. பாகிஸ்தானுடனான மோதல்கள் மற்றும் சீனாவுடனான தற்போதைய பதற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ஆயுதப் படைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் […]

உலகம்

ஈரானிய மக்களுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – லிண்ட்சே வலியுறுத்து!

  • May 5, 2026
  • 0 Comments

தெஹ்ரான் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மக்கள் புரட்சியைத் தூண்டுவதற்கு ஏதுவாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து ஈரானிய மக்களுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குமாறு தென் கரோலினா குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (Sen. Lindsey Graham) அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா-ஈரான் மோதல்கள் தீவிரமடைந்திருந்த சமயத்தில் கிரஹாம் இதனை முன்மொழிந்துள்ளார். இந்த அணுகுமுறை அமெரிக்கப் படைகளை அனுப்புவதைத் தவிர்த்து, மில்லியன் கணக்கான ஈரானியர்கள் கிளர்ந்தெழ வலுவூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். டிசம்பர் பிற்பகுதி மற்றும் […]

இலங்கை செய்தி

செம்மணியில் குழந்தையின் என்புக்கூடு உட்பட இரண்டு மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு

  • May 5, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 08 ஆம் நாளான இன்று (05), குழந்தையின் என்புக்கூடு உட்பட இரண்டு மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தங்கம் எனச் சந்தேகிக்கப்படும் ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது 05 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளிலிருந்து, ஒரு குழந்தையின் என்புக்கூடு மற்றும் மற்றுமொரு என்புக்கூடு என இரண்டு தொகுதிகள் இன்று கண்டெடுக்கப்பட்டன. இதன்படி, செம்மணி மனிதப் […]

உலகம்

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதா? : பீட் ஹெக்ஸெத் பதில்!

  • May 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hexath) தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையும், வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நடவடிக்கையும் இரண்டு தனித்தனி செயல்முறைகள் என்றும் அவர் இதன்போது விளக்கியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்வோம்.  அதை மிகவும் ஆக்ரோஷமாகச் செய்வோம் என்றும் கூறினோம். நாங்கள் அதைச் […]

ஐரோப்பா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • May 5, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயரும் என பிரித்தானியாவின் RAC அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் மொத்த எரிபொருள் விலைகள் லிட்டருக்கு சுமார் 5 பென்ஸ் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வால் ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான காருக்கு எரிபொருள் நிரப்பும் செலவு  £3.30 பவுண்ஸ் ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் தாக்கம் இன்னும் எரிபொருள் நிரப்பும் […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சு வார்த்தை

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது முக்கியமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது குறித்து உரையாடல் இடம்பெறும் என அவர் தெரிவித்தார். இந்த முக்கிய நீர்வழியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகம் செய்தி

ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

வர்த்தகக் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டால், அமெரிக்கா “அளவற்ற ஆயுத பலத்தை” பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய கடற்படை நடவடிக்கையான “ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்” மூலம் இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்காவிலிருந்து உலகிற்கு ஒரு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் […]

உலகம்

ட்ரம்பிற்கு முன்னதாக சீனாவை சென்றடைந்த அராக்சி!

  • May 5, 2026
  • 0 Comments

தெஹ்ரான் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே நடைபெற்று வரும் ராஜதந்திர ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று சீனாவுக்குப் பயணம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது அராக்சி தனது சீனப் பிரதிநிதியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர், மே 14 முதல் தொடங்கும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் சீனாவின் தலைவர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ள நிலையில் அராக்சியின் இந்த விஜயம் […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் விவகாரம் – கபில சந்திரசேனவுக்கு பிணை

  • May 5, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை  பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடை விதித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு […]

செய்தி பொழுதுபோக்கு

மே 14 திரைக்கு வருகிறது கருப்பு!

  • May 5, 2026
  • 0 Comments

பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அத்துடன், மே 14 ஆம் திகதி திரையரங்குகளில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு படத்தில் சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார்.