இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தவெகவுக்கு ஆதரவளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த ஆதரவு வழங்கப்படுகின்றது.” என காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

இலங்கை செய்தி

” இலங்கை, இந்திய தரைவழிப்பாதை காலத்தின் கட்டாயத் தேவை”

  • May 6, 2026
  • 0 Comments

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது” இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கி.மீ மட்டுமே. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடிச் சாலை, தொடருந்து இணைப்பு, முறையாகச் செயல்படும் படகு […]

செய்தி

ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

  • May 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 49 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் சறுக்கலைச் சந்தித்தது. பாட் […]

உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர முயல்கிறதா கனடா? கார்னியின் புதிய முயற்சி!

  • May 6, 2026
  • 0 Comments

ஆர்மீனியாவின் யெரெவனில் (Yerevan) நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னி கலந்துகொள்ளவுள்ளார். இதன் மூலம் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் ஐரோப்பியரல்லாத நாடு என்ற பெருமையை கனடா பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 48 இற்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. அமெரிக்க சந்தைகளை இழந்த பிறகு, புதிய வர்த்தக மற்றும் இராஜதந்திர கூட்டணிகளின் வலையமைப்பை உருவாக்கத் தான் உறுதியாக இருப்பதாக கார்னி கூறியுள்ள நிலையில் அவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இது கனடா […]

உலகம்

அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறு : கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

  • May 6, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. மேற்படி உடன்பாடு எட்டப்பட்டால் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணமாகும். அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $1.52 (1.38%) குறைந்து $108.35 ஆக உள்ளது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை $1.50 (1.47%) குறைந்து […]

இலங்கை

இலங்கையில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!

  • May 6, 2026
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (06) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அது 7,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, […]

ஆஸ்திரேலியா செய்தி

சிரியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் ‘IS பெண்களை’ கைது செய்ய ஏற்பாடு!

  • May 6, 2026
  • 0 Comments

சிரியாவிலுள்ள முகாமில் தங்கியிருந்த ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப உள்ளனர். அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவர்களில் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்று ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் தெரிவித்துள்னர். மேற்படி குழுவினர் வியாழக்கிழமை இரவு ஆஸ்திரேலியா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி குழுவில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் உள்ளனர். வடக்கு சிரியாவில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் கொண்ட […]

உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 26 பேர் பலி

  • May 6, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 80ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

தாயகம் திரும்பினார் மாலைதீவு ஜனாதிபதி!

  • May 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மாலைதீவு – இலங்கை இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரின் இந்த இலங்கை விஜயம் வெற்றிகரமாக அமைந்திருந்தது. மாலைதீவு ஜனாதிபதி இந்நாட்டிற்கு வருகை தந்த முதல் […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

மனநல ஆதரவிற்காக AI மென்பொருளை நாடும் இளைஞர்கள் அதிகரிப்பு!

  • May 6, 2026
  • 0 Comments

மனநல ஆதரவிற்காக நான்கில் ஒருவர் AI மென்பொருளை பயன்படுத்துவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினரே இந்த மென்பொருளை பயன்படுத்துவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கிட்டத்தட்ட பாதி ஐரோப்பிய இளைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். சுகாதார நிபுணர்களுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை விட இது தங்களுக்கு எளிதாக இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 11-25 வயதுடையவர்களில் […]