இலங்கை செய்தி

‘நிதி அமைச்சின் செயலாளர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை’

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

ஹர்ஷன சூரியப்பெரும இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமைகளை பெற்றிருந்தாரா என்பது குறித்தும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது தனது ஆஸ்ரேலிய குடியுரிமையை முறையாகத் துறந்தாரா அல்லது துறப்புக்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்தாரா என்பது குறித்தும் அண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட ஊடகத்துறைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, ,

‘ஹர்ஷன சூரியப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராகவோ, பிரதி அமைச்சராகவோ, அல்லது நிதி அமைச்சின் செயலாளராகவோ இருந்த காலத்தில், இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை.

அவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல. அந்தப் பதவிகளில் பணியாற்றியபோது அவர் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்.

அவர் இந்தப் பதவிகளை வகித்தபோது இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!