உலகம் செய்தி

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாம் வெற்றி பெற விரும்புவதால், ஈரானின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், நிதித்துறைச் செயலாளர் Scott Bessent இதுவரை இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.

மேலும், ஈரானின் நாணய மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பணவீக்கம் சுமார் 150% வரை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டு மக்களை கொல்ல விரும்பவில்லை. அதனால் அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!