இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆளுநர் அழைப்பு: முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு!

தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார் என தெரியவருகின்றது.

ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பதவியேற்பு நிச்சயம் நடக்கும் என தெரிகின்றது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

‘மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்’ ஆகிய 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் கட்சித் தலைவர் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதேவேளை, திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தவும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில், முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி