ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர முயல்கிறதா கனடா? கார்னியின் புதிய முயற்சி!
ஆர்மீனியாவின் யெரெவனில் (Yerevan) நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னி கலந்துகொள்ளவுள்ளார்.
இதன் மூலம் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் ஐரோப்பியரல்லாத நாடு என்ற பெருமையை கனடா பெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் 48 இற்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
அமெரிக்க சந்தைகளை இழந்த பிறகு, புதிய வர்த்தக மற்றும் இராஜதந்திர கூட்டணிகளின் வலையமைப்பை உருவாக்கத் தான் உறுதியாக இருப்பதாக கார்னி கூறியுள்ள நிலையில் அவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
இது கனடா அமெரிக்காவை தவிர்த்து ஐரோப்பிய சந்தைகளை நாடியுள்ளதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
அதேநேரம் ஒட்டோவா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர முயலக்கூடும் என்ற பரிந்துரைகளையும் கனேடிய இராஜதந்திரிகள் நிராகரித்துள்ளனர்.




