இலங்கை செய்தி

” இலங்கை, இந்திய தரைவழிப்பாதை காலத்தின் கட்டாயத் தேவை”

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது”

இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

” இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கி.மீ மட்டுமே.

ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடிச் சாலை, தொடருந்து இணைப்பு, முறையாகச் செயல்படும் படகு சேவை அல்லது மின்சாரக் கட்டமைப்பு இணைப்பு எதுவும் இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாடு.

இத்தகைய இணைப்பை ஏற்படுத்துவது இரு நாடுகளின் பொருளாதாரப் புவியியலை முழுமையாக மாற்றியமைக்கும்.

ஒரு பிராந்திய மையமாக மாறுவதற்கான இலங்கையின் இலட்சியத்திற்கு இது ஒரு பெரிய உந்துதலை வழங்கும்.

தற்போது இந்தியா, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஆதாரமாகவும், அந்நிய நேரடி முதலீட்டிற்கு முக்கியப் பங்களிப்பாளராகவும் உள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை செய்யப்பட்ட மொத்த முதலீடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்திய முதலீடுகளாகும்.

தொலைத்தொடர்பு, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், நிதிச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளன என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை