இலங்கை செய்தி

யாழ். வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்த பகுதி பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள்!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இன்று அனர்த்தம் இடம்பெற்ற பகுதியை நேரில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறினார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஆரம்பமானது என்று தெரிவித்த அவர், தீ விபத்தின் பாதிப்புகள் […]

ஐரோப்பா செய்தி

“மிகவும் வலிக்கிறது” – தேர்தல் தோல்வி குறித்து ஸ்டார்மர் கருத்து

  • May 9, 2026
  • 0 Comments

தொழிற்கட்சி பிரமுகர்கள் சிலர் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்த தகவல்களுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார். தேர்தல் முடிவுகள் கடினமானவை என்றும், “நிச்சயமாக இது வலிக்கிறது” என்றும் அவர் கூறினார். இருப்பினும், முன்னோக்கி செல்லும் பாதையை வகுப்பதே முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டார். குறிப்பாக, நாடு எதிர்கொள்ளும் நிதி மற்றும் சர்வதேச சவால்களைப் பற்றி மக்களிடம் வெளிப்படையாக பேசப்பட்டாலும், அந்த மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்தும் என்பதை […]

இலங்கை செய்தி

யாழ்.வைத்தியசாலை தீ விபத்து: பின்னணியில் சதியா?

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று அதிகாலை தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். இந்த அனர்த்தம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இது […]

ஐரோப்பா கல்வி

வேல்ஸ் அரசியல் முடிவுகள் – கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பசுமைக் கட்சி  

  • May 9, 2026
  • 0 Comments

அடுத்த வேல்ஸ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக வேல்ஸ் பசுமைக் கட்சித் தலைவர் அந்தோனி ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிளைட் கம்ருவின் துணைத் தலைவர், தேர்தலில் அதிக இடங்களை பெற்றிருந்தாலும் முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறிய தங்கள் கட்சி, செனட்டில் பொதுவான கொள்கைகள் கொண்ட மற்ற முற்போக்குக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிக்கும் என தெரிவித்திருந்தார். இதனிடையே, சீர்திருத்தக் கட்சி வெற்றி பெறாததை வரவேற்ற அந்தோனி ஸ்லாட்டர், 96 இடங்களில் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விசிக ஆதரவு: 118 ஐ உறுதிப்படுத்தியது தவெக!

  • May 9, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா , விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் , விசிக தலைவர் திருமாவளவன் வழங்கியுள்ளார். திருமாவளவன் கையளித்த ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா ஊடகங்களிடம் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் மேலும் ஐந்து உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்

  • May 9, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் அனைத்து முடிவுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில், 136 உள்ளூராட்சிகளில் 131 பகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக வேண்டியுள்ள ஐந்து உள்ளூராட்சிகளின் முடிவுகள் பிராட்போர்டு, க்ராய்டன், லேம்பெத், லூயிஷாம் மற்றும் டவர் ஹாம்லெட்ஸ் பகுதிகளுக்கானவையாகும். இந்த முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

புதிய ஆலோசகர்களாக கோர்டன் பிரவுன், ஹாரியட் ஹார்மன் நியமனம்

  • May 9, 2026
  • 0 Comments

ஹாரியட் ஹார்மன் மற்றும் கோர்டன் பிரவுன் ஆகியோரை புதிய ஆலோசகர் பதவிகளில் நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் ஸ்டார்மர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை வலுப்படுத்த சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட கோர்டன் பிரவுன் மிகவும் தகுதியானவர் என்று அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டார். அதேவேளை, ஹாரியட் ஹார்மனை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வலுவான ஆதரவாளர் என பாராட்டிய ஸ்டார்மர், கட்டமைப்பு ரீதியான பெண்வெறுப்பை எதிர்கொள்ள அவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் […]

உலகம் செய்தி

நோட்டோமீது புடின் விமர்சனக்கணை தொடுப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

உக்ரைன்மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ அமைப்பையும் சாடியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றி நாள் அணிவகுப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆண்டுகளை விட இந்த முறை ராணுவக் கண்காட்சிகள் குறைக்கப்பட்ட போதிலும், பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் தேசியவாத உணர்வுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. ரஷ்யாவின் எதிர்காலம் அதன் மக்களின் உழைப்பால் கட்டமைக்கப்படுவதாகக் […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் மீண்டும் அமைதி பேச்சு?

  • May 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான 2 ஆம் கட்ட அமைதி பேச்சு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் இச்சந்திப்பு நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றது. அமைதி பேச்சுக்கு அந்நாடு மத்தியஸ்தம் வகித்தது. எனினும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையிலேயே இரண்டாம் சுற்று பேச்சு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவும் […]

இந்தியா செய்தி

சரிந்தது மம்தா பானர்ஜியின் கோட்டை: பாஜக முதல்வர் பதவியேற்பு!

  • May 9, 2026
  • 0 Comments

தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பதிவுசெய்த நிலையில், மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, சுவேந்துக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் […]