இலங்கை செய்தி

யாழ். வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்த பகுதி பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள்!

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இன்று அனர்த்தம் இடம்பெற்ற பகுதியை நேரில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறினார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஆரம்பமானது என்று தெரிவித்த அவர், தீ விபத்தின் பாதிப்புகள் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

“எரியுண்ட களஞ்சியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட அதிதீவிர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெறுமதிமிக்க மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது தீக்கிரையாகியுள்ளன.

இந்த அனர்த்தத்தால் வைத்தியசாலைக்குப் பல கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணைகள் ஒருபுறமும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணைகள் மறுபுறமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை உறுதிப்படுத்த பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை அவசியமாகும். அதுவரை எரியுண்ட பகுதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கும்.” – என்று அவர் சுட்டிக்காட்டினார்.ணிக்கு வட்டகொடை மணிப்பூர் சிறுவர் நிலைய முன்றலில் நினைவுரைகள் இடம்பெறவுள்ளன.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை