இங்கிலாந்தின் மேலும் ஐந்து உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்
ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் அனைத்து முடிவுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில், 136 உள்ளூராட்சிகளில் 131 பகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இன்னும் வெளியாக வேண்டியுள்ள ஐந்து உள்ளூராட்சிகளின் முடிவுகள் பிராட்போர்டு, க்ராய்டன், லேம்பெத், லூயிஷாம் மற்றும் டவர் ஹாம்லெட்ஸ் பகுதிகளுக்கானவையாகும்.
இந்த முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





