சூடானில் கொள்ளையர்கள் அட்டகாசம் – 49 பேர் படுகொலை
சூடானின் வடக்கில் உள்ள யூனிட்டி மாநிலத்தில் கொள்ளையர்களின் தாக்குதலினால் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய கால்நடை கொள்ளையர்கள், நேற்று அதிகாலை கால்நடை மேய்ப்பர்கள் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 49 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு சூடானில் பழங்குடியினர் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான வன்முறை பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது.
அங்கு கால்நடை மேய்ப்பர்கள், தங்கள் கால்நடைகளுக்கான அரிதான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தண்ணீருக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். நாட்டில் பொதுமக்களின் கைகளில் துப்பாக்கிகள் ஏராளமாக இருப்பது இந்த வன்முறையை மேலும் தீவிரப்படுத்துகிறது.




