விசிக ஆதரவு: 118 ஐ உறுதிப்படுத்தியது தவெக!
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா , விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் , விசிக தலைவர் திருமாவளவன் வழங்கியுள்ளார்.
திருமாவளவன் கையளித்த ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா ஊடகங்களிடம் காண்பித்தார்.
வெற்றி, வெற்றி, விஜய் முதல்வராக பதவியேற்பது உறுதி எனவும் அவர் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிகவுக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




