உலகம் செய்தி

நோட்டோமீது புடின் விமர்சனக்கணை தொடுப்பு!

உக்ரைன்மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ அமைப்பையும் சாடியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றி நாள் அணிவகுப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளை விட இந்த முறை ராணுவக் கண்காட்சிகள் குறைக்கப்பட்ட போதிலும், பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் தேசியவாத உணர்வுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது.

ரஷ்யாவின் எதிர்காலம் அதன் மக்களின் உழைப்பால் கட்டமைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட புடின், போர்க்களத்தில் உள்ள வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி