புதிய ஆலோசகர்களாக கோர்டன் பிரவுன், ஹாரியட் ஹார்மன் நியமனம்
ஹாரியட் ஹார்மன் மற்றும் கோர்டன் பிரவுன் ஆகியோரை புதிய ஆலோசகர் பதவிகளில் நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் ஸ்டார்மர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை வலுப்படுத்த சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட கோர்டன் பிரவுன் மிகவும் தகுதியானவர் என்று அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஹாரியட் ஹார்மனை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வலுவான ஆதரவாளர் என பாராட்டிய ஸ்டார்மர், கட்டமைப்பு ரீதியான பெண்வெறுப்பை எதிர்கொள்ள அவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
பொது வாழ்வில் பெண்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்க ஹார்மன் முக்கிய பங்காற்றுவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.





