A66 சாலை விபத்து தொடர்பில் 17 பேர் கைது – வாகனங்களும் தீக்கிரை
பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை பொலிஸார் பின்தொடர்ந்ததன் காரணமாக இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A66 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் இரு காவல்துறை அதிகாரிகள் உள்பட 07 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த 23 வயதான மைக்கேல் கேஹிலுக்காக Michael Cahill இடம்பெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்வம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




