அரசியல் இலங்கை செய்தி

ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சு பதவி?

“நிதி அமைச்சு பதவியை பெறுவதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிப்பார்.”

இவ்வாறு ஐமசவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“நிதி அமைச்சு பதவியை பெறுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கும் நிலைப்பாட்டில் அவர் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க அழைத்தபோதுகூட மக்கள் ஆணைக்கு புறம்பாக ஹர்டி டி சில்வா செயல்படவில்லை. அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே பயணிப்பார்.

அதேவேளை, எரான் விக்கிரமரத்ன கிரிக்கெட் சபையில் பதவியேற்றதை எமது கட்சி அங்கீகரிக்கவில்லை. கட்சியில் வகித்த பதவிகளை அவர் துறந்திருந்தாலும், கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகவில்லை.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!