உலகம் செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’- இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது!

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் Pete Hexathon தெரிவித்துள்ளார்.

இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறியக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இங்கு உரையாற்றுகையிலேயே அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ஆசியாவில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு. அது, தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.

இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவத் திறன்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் அதன் உத்திகள் பாராட்டுக்குரியது.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு அமைப்பில், இந்தியாவின் பங்கு முக்கியமானது.” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது.

இரு நாடுகளும் ராணுவத் தயார்நிலை மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்க கூட்டு தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

உலகின் மிகச்சிறந்த ஆயுதங்களை அதிக அளவில், அதிவேகத்தில் மற்றும் நியாயமான விலையில் நாங்கள் தயாரிப்போம்.

ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்புக்காக 1 டிரில்லியன் டாலர் செலவிட்டார் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!