செய்தி விளையாட்டு

IPL சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா RCB?

ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன.

லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தது.

மறுபுறம் முதல் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி தகுதி சுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ளது.

புள்ளிவிவரப்படி நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, 2022-ம் ஆண்டு கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது.

இதற்கு ஆர்சிபி அணி இந்தத் தொடரில் இதுவரை விளையாடி வரும் அதிரடி ஆட்டமுறையே முக்கியக் காரணமாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி