பழைய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு வியூகம் அமைக்கும் ஆஸ்திரேலியா
ஆக்கஸ் (AUKUS) ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா பெறவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (Second-hand) நீர்மூழ்கிக் கப்பல்களாகவே இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை தலைவர்களின் உயர்மட்ட மாநாட்டில் (Shangri-La Dialogue) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஆக்கஸ் (AUKUS) முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு பழைய நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பலையும் பெறும் என்றே இதுவரை எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய புதிய திட்டத்தின்படி, ஆஸ்திரேலியா பெறவுள்ள மூன்று ‘வெர்ஜினியா கிளாஸ்’ (Virginia-class) நீர்மூழ்கிக் கப்பல்களும் அமெரிக்க கடற்படையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவையாகவே இருக்கும்.” என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய அணுகுமுறை செலவுகளைக் குறைப்பதோடு, நீர்மூழ்கிக் கப்பல்களை விநியோகிக்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கும் என்றும் ரிச்சர்ட் மார்லெஸ்
கூறியுள்ளார்.




