இலங்கை

பேருந்து கட்டணத்தை உயர்த்த முன்மொழிவு!!

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப இடைக்கால பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்கு முன்னர் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அச்சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் இரண்டாம் கிகதி முதல் ஐந்து சதவிகிதக் கட்டண உயர்வை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம்   32 அல்லது 33 ரூபாயாக அதிரிக்கப்பட வேண்டும் என ஜெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்