ஐரோப்பா

பிரித்தானிய அரசாங்கத்தின் மெத்தனபோக்கு – உயிரிழக்கும் கைதிகள்!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானிய சிறைச்சாலைகளில் தீவிபத்துகள் காரணமாக ஏராளமான கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகளில் சட்டப்படி தேவைப்படும் தானியங்கி தீ கண்டறியும் அமைப்புகள் (AFDs) இல்லாத காரணத்தால், இவ்வாறான தீ விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து சிறை அறைகளையும் தீ பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் தனது உறுதிப்பாட்டை நீதி அமைச்சகம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 21,000-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளில் இன்னும் அடிப்படை தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் […]

உலகம் செய்தி

ஈரானுடனான ஒப்பந்தம் அவசரம் இல்லை என்கிறது அமெரிக்கா

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம்  மேற்கொள்ள எந்தவொரு அவசரமும் இல்லையென  அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறினார் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் உள்ளது, நாங்கள் ஒப்பந்தத்திற்காக ஆர்வமாக இல்லை என்று தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை கைவிடுவதை மையமாகக் கொண்ட எந்தவொரு உடன்படிக்கையும் தற்போது ஈரானின் கையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கருத்துகள்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

இலங்கை செய்தி

நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நெடுந்தீவில் போராட்டம்!

  • April 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இன்று (24) மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை. குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை […]

உலகம் செய்தி

லெபனான்–இஸ்ரேல் போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமைதிக்கான வாய்ப்பா, சவாலா?

  • April 24, 2026
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதை லெபனான் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி, பெய்ரூட் அரசு, ஈரான் ஆதரவு பெற்ற  ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருப்பினும், போர்நிறுத்தம் மீறப்பட்டதாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் இராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சமத்தியுள்ளன. மேலும், இஸ்ரேல் வலியுறுத்தும் […]

ஐரோப்பா

கடும் வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிலவும் கடும் வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதீத வெப்ப நிலை, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அளவிலான சேதங்களை விளைவிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய   ரயில்வே தண்டவாளங்கள் வளைதல், சாலைகள் உருகுதல் மற்றும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதியவர்கள், குழந்தைகள் உடல்நிலைக் குறைப்பாடுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள அதேநேரம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

யாழிலிருந்து மலையகத்துக்கு யாத்திரை!

  • April 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்த யாத்திரையில், சுமார் 60 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், சிவபெருமானின் திருவுருவச் சிலையை வாகன ஊர்தியில் தாங்கியவாறு யாத்திரிகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர். இன்று மாலை நகர் வலமாக வருகை […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்துக்கு பயணம் – போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரும் குழப்பம்

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த தகவல் குறித்து ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவோரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் “போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள்” குறித்து […]

இலங்கை செய்தி

காணி விடுவிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டியில் போராட்டம்

  • April 24, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி , காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் […]

உலகம் செய்தி

லெபனானில் காயமடைந்த இந்தோனேசிய அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 24, 2026
  • 0 Comments

லெபனானில் பணியாற்றி வந்த  யூனிஃபில் அமைதிப்படையில் சேர்ந்த இந்தோனேசிய வீரர் ஒருவர், கடந்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யூனிஃபில் வெளியிட்ட தகவலின்படி, Riko Pramudia என்ற கார்ப்பரல் (Corporal), மார்ச் 29ஆம் திகதி இரவு அட்சித் அல் குசைர் பகுதியில் உள்ள தளத்தில் ஏற்பட்ட எறிபொருள் வெடிப்பில் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளை கடைப்பிடித்து, ஐ.நா. பணியாளர்கள் […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க அழுத்தம்? பென்டகன் மின்னஞ்சல் சர்ச்சை

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகனிலிருந்து வெளியானதாகக் கூறப்படும் ஒரு உள் மின்னஞ்சல், தனது நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நட்பு நாடுகளை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமையைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவுகள் மீது அர்ஜென்டினாவும் உரிமைக் கோரிக்கை வைத்துள்ளது. […]

error: Content is protected !!