இலங்கை செய்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்கிறது வடக்கு!

  • April 24, 2026
  • 0 Comments

‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது. வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் […]

ஐரோப்பா

யூரோ மண்டலத்தில் முன்னேறிய கிரீஸ் – இத்தாலிக்கு பின்னடைவு!

  • April 24, 2026
  • 0 Comments

கிரீஸின் கடன் சுமை இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்நாடானது கடன் சுமையில் இருந்து விடுப்பட்டு  யூரோ மண்டலத்தில் அதிகக் கடன் சுமை கொண்ட நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனக்  கணிக்கப்பட்டுள்ளது. 2025-ல் 145.9% ஆக இருந்த கிரீஸின் கடன், இந்த ஆண்டு   சுமார் 137% ஆகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, இத்தாலி தனது கடன் சுமையை 137.1 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் 138.6 வீதமாக […]

உலகம்

நெதன்யாகுவிற்கு புற்றுநோய் பாதிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புரோஸ்டேட் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். 76 வயதான அவர், கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில்  புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து வீரியம் மிக்க கட்டிக்கு சிகிச்சை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது, ​​ஒரு சிறிய, ஆரம்ப நிலை வீரியம் மிக்க கட்டி கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக ஜெருசலேமில் சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவித்தார். புற்றுநோயின் எந்தத் தடயத்தையும் விட்டுவைக்கவில்லை என்றும் அவர் […]

இந்தியா உலகம்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

  • April 24, 2026
  • 0 Comments

இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “ஏப்ரல் 20 முதல் 23 வரை, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை உயரதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பில் தர்பன் ஜெயின் தலைமை தாங்கினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, சந்தை […]

உலகம்

ஈரான் போரால் பனாமாவிற்கு அடித்த லக்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்களால் வணிக நிறுவனங்கள் மாற்று வழியை தேட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், பனாமா கால்வாய் வழியாகப் பயணிப்பதற்காக வணிக நிறுவனங்கள் 4 மில்லியன் டொலர் வரை செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என பனாமா கால்வாய் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், விநியோகச் சங்கிலிகளைச் சரிசெய்வதற்கும், நிலையற்ற இந்த மத்திய கிழக்கு நீர்வழியைத் தவிர்ப்பதற்காகவும், வணிக நிறுவனங்கள் பனாமா கால்வாயை நாடியுள்ளன. சாதாரணப் பயணங்களுக்கு […]

உலகம் செய்தி

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை: முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

  • April 24, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில், அந்த முற்றுகை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க மீறல் என்று கூறினார். மேலும், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும்போது ஈரானின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவிடமிருந்து ஒரு யதார்த்தமான அணுகுமுறை […]

இலங்கை செய்தி

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்

  • April 24, 2026
  • 0 Comments

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள தரப்பினர், அது குறித்து அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது, அன்னதானம் நடத்தப்படும் இடம் மற்றும் அது எவ்வகையான  என்பது குறித்த விபரங்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். […]

ஐரோப்பா

தொழிலாளர்களுக்கு வரி விலக்கு – ஜெர்மனியில் புதிய சட்டம்!

  • April 24, 2026
  • 0 Comments

தொழிலாளர்களுக்கான வரி விலக்கு,  நிவாரண ஊக்கத்தொகை மற்றும் எரிபொருள் தள்ளுபடி ஆகியவற்றை உள்ளடக்கிய  திட்டத்திற்கு ஜெர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் போர்  காரணமாக அதிகரித்த பெட்ரோல் விலைகளின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தள்ளுபடியானது, டீசல் மற்றும் பெட்ரோலுக்கான எரிசக்தி வரியில் ஒரு லிட்டருக்கு சுமார் 0.17 யூரோக்கள் என்ற குறைப்பை வழங்குகின்றது. அத்துடன் இந்த சட்டத்தின்மூலம் தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து 1,000 யூரோக்கள் வரையிலான தன்னார்வ வரி விலக்கு […]

இலங்கை செய்தி

நேட்டோவிலிருந்து ஸ்பெயின் நீக்கப்படுமா?

  • April 24, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்குவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது என வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்டகனின் மின்னஞ்சலொன்றை மேற்கோள்காட்டியே இது தொடர்பில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தாலேயே ஸ்பெயின் இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனினும், நேட்டோ அமைப்பின் விதிமுறைகளுக்கமைய ஒரு உறுப்பு நாட்டை நீக்குவதற்கோ அல்லது இடைநீக்கம் செய்வதற்கோ ஏற்பாடு இல்லை என தெரியவருகின்றது. அதேபோல மேற்படி தகவலை ஸ்பெயின் பிரதமரும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஈரான்மீதான […]