லெபனான்–இஸ்ரேல் போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமைதிக்கான வாய்ப்பா, சவாலா?
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதை லெபனான் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி, பெய்ரூட் அரசு, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இருப்பினும், போர்நிறுத்தம் மீறப்பட்டதாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் இராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சமத்தியுள்ளன.
மேலும், இஸ்ரேல் வலியுறுத்தும் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை களைவது தொடர்பான கோரிக்கை, நீண்டகால அமைதிக்கான முயற்சிகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது லெபனான் அரசாங்கத்திற்கு கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தர்களாக பாகிஸ்தான் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சந்திப்புகள் நடைபெற வாய்ப்புள்ளதால், பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி, ஐரோப்பிய ஒன்றியம் , எகிப்து, சிரியா மற்றும் லெபனான் தலைவர்களுடன் உச்சிமாநாடு நடத்தி வருகிறது.





