உலகம் செய்தி

லெபனானில் காயமடைந்த இந்தோனேசிய அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

லெபனானில் பணியாற்றி வந்த  யூனிஃபில் அமைதிப்படையில் சேர்ந்த இந்தோனேசிய வீரர் ஒருவர், கடந்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

யூனிஃபில் வெளியிட்ட தகவலின்படி, Riko Pramudia என்ற கார்ப்பரல் (Corporal), மார்ச் 29ஆம் திகதி இரவு அட்சித் அல் குசைர் பகுதியில் உள்ள தளத்தில் ஏற்பட்ட எறிபொருள் வெடிப்பில் கடுமையாக காயமடைந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளை கடைப்பிடித்து, ஐ.நா. பணியாளர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியது.

இந்த மோதலின் போது இதுவரை மொத்தம் ஆறு அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!