ஐரோப்பா

பிரித்தானிய அரசாங்கத்தின் மெத்தனபோக்கு – உயிரிழக்கும் கைதிகள்!

பிரித்தானிய சிறைச்சாலைகளில் தீவிபத்துகள் காரணமாக ஏராளமான கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகளில் சட்டப்படி தேவைப்படும் தானியங்கி தீ கண்டறியும் அமைப்புகள் (AFDs) இல்லாத காரணத்தால், இவ்வாறான தீ விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து சிறை அறைகளையும் தீ பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் தனது உறுதிப்பாட்டை நீதி அமைச்சகம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 21,000-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளில் இன்னும் அடிப்படை தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறை அறைகளில் ஏற்படும் தீ விபத்துகள் 124 சதவீதம் அதிகரித்து, ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!