உலகம் செய்தி

ஈரானுடனான ஒப்பந்தம் அவசரம் இல்லை என்கிறது அமெரிக்கா

அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம்  மேற்கொள்ள எந்தவொரு அவசரமும் இல்லையென  அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறினார்

ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் உள்ளது, நாங்கள் ஒப்பந்தத்திற்காக ஆர்வமாக இல்லை என்று தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை கைவிடுவதை மையமாகக் கொண்ட எந்தவொரு உடன்படிக்கையும் தற்போது ஈரானின் கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த கருத்துகள்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்த நிலைப்பாட்டுடன் ஒத்திருக்கின்றன. அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர உடனடி அழுத்தம் இல்லை என்று கூறியிருந்தார்.

மேலும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து, அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆரம்பத்தில் மோதல் நான்கு முதல் ஆறு வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், தற்போது அது இரண்டு மாதங்களை நெருங்குகிறது.

ஆனால், இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் தெளிவான நிலை இன்னும் வெளியாகவில்லை.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!