கடும் வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
பிரித்தானியாவில் நிலவும் கடும் வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதீத வெப்ப நிலை, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அளவிலான சேதங்களை விளைவிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ரயில்வே தண்டவாளங்கள் வளைதல், சாலைகள் உருகுதல் மற்றும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதியவர்கள், குழந்தைகள் உடல்நிலைக் குறைப்பாடுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள அதேநேரம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.





