இலங்கை செய்தி

யாழிலிருந்து மலையகத்துக்கு யாத்திரை!

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்த யாத்திரையில், சுமார் 60 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், சிவபெருமானின் திருவுருவச் சிலையை வாகன ஊர்தியில் தாங்கியவாறு யாத்திரிகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர்.

இன்று மாலை நகர் வலமாக வருகை தந்த யாத்திரிகர்கள், சிவபுராணம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடியவாறு சிவனொளிபாதமலையை நோக்கித் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்த ஆன்மீகப் பயணத்துக்கு மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளது.

நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் இந்தப் பாதயாத்திரை மரபு, வடபுலத்து மக்களுக்கும் மலையக மக்களுக்கும் இடையிலான ஆன்மீகப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!