இலங்கை செய்தி

நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நெடுந்தீவில் போராட்டம்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இன்று (24) மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது.

அதிலும் 80பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகிறது .

இதனால் நேயமற்ற மற்றும் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

குறித்த போராட்டத்தில் பிள்ளைளைகளுக்கான கல்வி வேண்டும், சாறாப்பிட்டி நன்னீரை தாரை வார்க்காதே!, வரிசை யுகம் எப்போது முடியும், சுத்தமான குடிநீர் வேண்டும், நெடுந்தாரகைக்குள் வதைக்காதே!

மனிதர்களாய் நடத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கருப்பு துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை உருவாக்கும் வகையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கறுப்பு கொடிகளைத்தாங்கியவாறு மகாவலி இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார் .அவரிடமும் போராட்டக்காரர்கள் மகஜரை கையளித்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!