உலகம்

Beauty of Sri Lanka புகைப்படக் கண்காட்சி இன்று!

  • April 25, 2026
  • 0 Comments

இலங்கையின் இயற்கை அழகை உலகிற்கு கொண்டு செல்லும் ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இன்று (25) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி ஹொலிவுட்டில் உள்ள ‘Celebrity Centre International’ இல் இன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலைச் சங்கம் மற்றும் லொஸ் ஏஞ்சலஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. உலக […]

உலகம்

கியூபா மீது போர் தொடுக்க தயாராகும் ட்ரம்ப் நிர்வாகம் – செனட்டில் வாக்கெடுப்பு!

  • April 25, 2026
  • 0 Comments

கியூபா மீது தாக்குதல் நடத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த செனட் சபை தீர்மானித்துள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களான டிம் கெய்ன் (Tim Kaine), ஆடம் ஷிஃப் (Adam Schiff) மற்றும் ரூபன் கல்லேகோ (Ruben Gallego) ஆகியோர் கடந்த மாதம் கியூபா போர் அதிகாரத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர். செனட் விதிகளின்படி,  குடியரசுக் கட்சித் தலைவர்கள்தான் அதை வாக்கெடுப்புக்கு கொண்டுவர அனுமதிக்க வேண்டும். வாக்கெடுப்பு நடைபெறும் சரியான நேரம் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் இஸ்லாமாபாத் பயணம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் பாகிஸ்தானில் 2ஆம் கட்ட அமைதிப் பேச்சுகள் இடம்பெறவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தரப்பில் டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் Steve Witkoff மற்றும் ட்ரம்பின் மருமகன் Jared Kushner ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத் செல்கின்றனர். ஈரானின் அணுஆயுதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முறையான உடன்படிக்கை எட்டப்படும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் நிபந்தனை விதித்துள்ளார். தற்போது ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்து முடக்கம் மற்றும் இரு […]

இலங்கை

சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று

  • April 25, 2026
  • 0 Comments

“ஏஹிபஸ்ஸிகோ” சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை வரை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான பிக்குகளின் பங்கேற்புடன், கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை ரஜமகா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

திறைசேரி செயலாளரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும்!

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்திற்கு பொருப்பேற்று திறைசேரி செயலாளரும், சம்பந்தப்பட்ட பொருள் அமைச்சரும் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திலீத் ஜெயவீர மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், திறைசேரி நிதிகள் அடையாளம் தெரியாத தரப்பினருக்கு மாற்றப்பட்ட சமீபத்திய சம்பவத்திற்கு ஹேக்கர்களைக் காரணமாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் நியாயமான விசாரணைகளுக்காக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பதவி விலக […]

ஐரோப்பா

ஃபாக்லாந்து தீவு சர்ச்சை : அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரித்தானியா அடிப்பணியுமா?

  • April 24, 2026
  • 0 Comments

ஃபாக்லாந்து ( Falkland Islands)  போன்ற ‘அரச ஆதிக்கப் பகுதிகளுக்கு’ அமெரிக்கா வழங்கும் தூதரக ஆதரவை ட்ரம்ப் நிர்வாகம் மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தொடர்பில் டவுனிங் தெரு எதிர்வினையாற்றியுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் சேர மறுக்கும் நேட்டோ கூட்டாளிகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக அமெரிக்காவின் ஆதரவு மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டவுனிங் தெரு, ‘ஈரான் போர் தொடர்பாக பிரிட்டன் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படாது’ என்றும், தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை […]

உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார். “லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து […]

ஐரோப்பா

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது கரிசனை!

  • April 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுக்கு €90 பில்லியன் கடனையும், ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 21வது தடைகள் தொகுப்பிற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளனர். ஈரான் போர் காரணமாக உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இந்த உதவி தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே நேட்டோவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் பரஸ்பர உதவிப் பிரிவிற்கான (சரத்து […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. […]

இலங்கை

இலங்கையின் அழகை உலகிற்கு வெளிக்காட்டு கண்காட்சி – லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பாடு!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் அழகை உலகிற்கு வெளிக்காட்டும்  புகைப்படக் கண்காட்சி,  அமெரிக்காவின்  லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஹாலிவுட்டில் உள்ள செலிபிரிட்டி சென்டர்  இன்டர்நேஷனலில் (Celebrity Centre International,Hollywood) நடைபெறும். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், அமெரிக்காவின் இலங்கை புகைப்பட சங்கத்துடன் இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!