இலங்கையின் அழகை உலகிற்கு வெளிக்காட்டு கண்காட்சி – லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பாடு!
இலங்கையின் அழகை உலகிற்கு வெளிக்காட்டும் புகைப்படக் கண்காட்சி, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஹாலிவுட்டில் உள்ள செலிபிரிட்டி சென்டர் இன்டர்நேஷனலில் (Celebrity Centre International,Hollywood) நடைபெறும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், அமெரிக்காவின் இலங்கை புகைப்பட சங்கத்துடன் இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





