கியூபா மீது போர் தொடுக்க தயாராகும் ட்ரம்ப் நிர்வாகம் – செனட்டில் வாக்கெடுப்பு!
கியூபா மீது தாக்குதல் நடத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த செனட் சபை தீர்மானித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களான டிம் கெய்ன் (Tim Kaine), ஆடம் ஷிஃப் (Adam Schiff) மற்றும் ரூபன் கல்லேகோ (Ruben Gallego) ஆகியோர் கடந்த மாதம் கியூபா போர் அதிகாரத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர்.
செனட் விதிகளின்படி, குடியரசுக் கட்சித் தலைவர்கள்தான் அதை வாக்கெடுப்புக்கு கொண்டுவர அனுமதிக்க வேண்டும்.
வாக்கெடுப்பு நடைபெறும் சரியான நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் மே 1-ஆம் திகதக்கு முன்னர் அது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில், அமெரிக்கப் படைகள் காங்கிரஸின் அங்கீகாரம் இல்லாமலேயே, வெனிசுலா கடற்பகுதியில் உள்ள படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றுவதற்காக கராகஸ் நகருக்குள் நுழைந்தன. மேலும் இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன.
ஆகவே இந்த வாக்கெடுப்பு வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என கருதப்படுகிறது.




