உலகம்

திருமணத்திற்குப் புறம்பான உறவில் பில்கேட்ஸ் : எப்ஸ்டீன் கோப்பில் வெளியான தகவல்!

  • February 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக  செல்வந்தரான பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்துள்ளார். அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டுள்ள  மின்னஞ்சல்களில், , கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான உடலுறவில் ஈடுபட்டதாகவும், “ரஷ்யப் பெண்களிடமிருந்து” பாலியல் ரீதியாக பரவும் தொற்று ஏற்பட்டதாகவும் எப்ஸ்டீன் குற்றம் சாட்டியதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக மறுத்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பில்கேட்ஸ், அவமானப்படுத்தப்பட்ட நிதியாளருடன் நேரத்தைச் செலவிட்டதற்காக தன்னை […]

இலங்கை செய்தி

புதுடெல்லி பறந்தார் ஜே.வி.பி. செயலாளர்!

  • February 5, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா tilvin silva தலைமையிலான குழுவினர் இன்று (05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பேரிலேயே அவர்கள் புதுடெல்லி நோக்கி பயணமானார்கள். இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று, முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் சந்திப்பு நடத்தவுள்னர். இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களுக்கு கண்காணிப்பு பயணமும் மேற்கொள்ளவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், இளங்குமரன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஐரோப்பா

இரு ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை : சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு!!

  • February 5, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும்  போர்ச்சுகலுக்கு சீரற்ற வானிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் அரையாண்டு பயணத்திற்கு தயாராகி வருவதால் வானிலைகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றைய தினம் ஸ்பெயினின் மலாக்கா மாகாணம் முழுவதும் கடுமையான மழைப் பொழிவு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 12 மணி நேரத்திற்குள் சதுர மீட்டருக்கு 150 லிட்டரைத் தாண்டி மழை பெய்யக்கூடும் என்றும், […]

பொழுதுபோக்கு

தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்து கௌரவித்த பார்த்திபன்!

  • February 5, 2026
  • 0 Comments

தூய்மை பணியாளருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன் Parthiban. குப்பையில் கிடந்த 45 பவுண் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த அவரின் செயலை பாராட்டியே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா, குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் சேர்ப்பித்துள்ளார். அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.” […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழப்பு குறித்து மைத்திரி கூறுவது என்ன?

  • February 5, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை NPP எளிதில் வீழ்த்திவிடலாம் என எதிரணி கருதுவது யதார்த்தமற்ற விடயமாகும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார். எதிரணிகளின் ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது அரசியல் கடமையை நிறைவேற்ற முற்படும். அதற்காக பல கருத்துகள் முன்வைக்கப்படலாம். குறிப்பாக ஆட்சி […]

உலகம்

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

  • February 5, 2026
  • 0 Comments

கடந்த 2024 ஆம் ஆண்டு  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த ரியான் ரூத்துக்கு  (Ryan Routh) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் பாம் பீச்சில் (West Palm Beach) தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது குறித்த படுகொலை முயற்சி அரங்கேற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நேற்று நடைபெற்ற நிலையில், ரூத்தின் குற்றங்கள் “மறுக்க முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனையை உத்தரவாதம் செய்கின்றன” என்று நீதிபதி ஐலீன் கேனன் குறிப்பிட்டார். அவர் ஒரு முக்கிய ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

புலி ஆதரவு தமிழ் டயஸ்போராக்களுக்கு ‘ஐஸ்’ வைப்பு: மஹிந்த அணி கொதிப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா நாட்டுக்காக நடத்தப்பட்டதா அல்லது புலி ஆதரவு தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்களை திருப்திப்படுத்த நடத்தப்படதா.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சரத் வீரசேகர Sarath Weerasekara கேள்வி எழுப்பியுள்ளார். “இலங்கை 17 தடவைகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. எனினும் எமது மூதாதையர்கள் நாட்டைப் பாதுகாத்தனர். 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் 72 ஆம் ஆண்டிலேயே அது முழு […]

உலகம்

போர் நிறுத்தத்தை மீறி மீளவும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – 20 பேர் பலி!

  • February 5, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் மீளவும் தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு துணை மருத்துவர் உட்பட குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள்” மீது துல்லியமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவித்துள்ளது. இது ஹமாஸுடனான மூன்று மாத கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் “அப்பட்டமான […]

உலகம் செய்தி

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் நாளை பேச்சு!

  • February 5, 2026
  • 0 Comments

ஈரான் Iran மற்றும் அமெரிக்கா US ஆகிய நாடுகளுக்கிடையிலான அணு சக்தி தொடர்பான பேச்சு நாளை (06) வெள்ளிக்கிழமை ஓமானில் Oman நடைபெறவுள்ளது. இரு நாடுகளும் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த சர்ச்சையால் இரு தரப்பு சந்திப்பு நடக்காது என ஊகம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே சந்திப்பு தற்போது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்குரிய ஏற்பாட்டை செய்த ஓமானுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi நன்றி […]

உலகம் செய்தி

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!

  • February 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதிக்கு Isaac Herzog இணையவழிமூலம் கொலை மிரட்டல் விடுத்தார் online death threat எனக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நியூடவுனைச் Newtown பகுதியைச் சேர்ந்த டார்சி டின்னிங் Darcy Tinning என்பவரே ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் AFP அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வரும் சர்வதேச பிரமுகருக்கு, தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார் என […]

error: Content is protected !!