ஹூதிகளைப் பணிய வைக்க புதிய வியூகம்: ஏமனில் போரை நீடிக்க சவூதி திட்டம்
ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு, 2027ஆம் ஆண்டு வரையிலும் நீடிப்பதற்கு சவூதி அரேபியா தயாராகி வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்களத்தில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ள நிலையிலும், ஹூதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர சவூதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ரியாத்தில் உள்ள அராம்கோ தலைமையகம் மற்றும் விமான நிலையம் மீதான தாக்குதல்களும் அந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன.
ஹூதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், தமக்கு ஆதரவான ஏமன் படைகள் களத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சவூதியின் திட்டமாக உள்ளதாக மேற்கத்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சவூதி தலைமையிலான கூட்டணியின் இராணுவத் தளபதியும் கடந்த திங்கட்கிழமை மாற்றப்பட்டுள்ளதுடன், ஏமன் அரசாங்கமும் தனது இராணுவத் தலைமைத்துவத்தில் மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




