இந்தியா செய்தி

இந்திய பிரதமருடன் பிரித்தானிய இளவரசர் சந்திப்பு

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர்.

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இணைந்து மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் இறுதிக்கட்டமாக, புதன்கிழமை புதுடில்லியைச் சென்றடைந்தனர்.

இந்தச் சந்திப்பு ஆரம்பத்தில் அவர்களின் பயணத் திட்டத்தில் இடம்பெறாத நிலையில், பிலிப்பைன்ஸுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு மோடி இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக, மும்பையில் நடைபெற்ற வருடாந்த ‘எர்த்ஷாட்’ (Earthshot Prize) விருது வழங்கும் நிகழ்வில் அரச தம்பதியினர் கலந்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டு இளவரசர் வில்லியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான புத்தாக்கத் தீர்வுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்முறை ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தமது திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக தலா ஒரு மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவின் காலநிலை புத்தாக்கத் தலைமைத்துவம், உயிர்ப்பல்வகைமை மற்றும் இளைஞர்களின் பெரும் எண்ணிக்கை ஆகிய காரணங்களால் இம்முறை விருது நிகழ்வை இந்தியாவில் நடத்தத் தீர்மானித்ததாக இளவரசர் வில்லியம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கு 2016ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது பிரதமர் மோடியைச் சந்தித்த அரச தம்பதியினர், தற்போது மீண்டும் அவரைச் சந்தித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி