உலகம் செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்: நால்வர் பலி

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவின் மத்திய பகுதியில் ரஷ்யப் படைகள் புதன்கிழமை மூன்று கட்டங்களாக நடத்திய தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக் கிபர் (Oleh Kiper) தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களால் குடியிருப்புக் கட்டடங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் கடைகளின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதுடன், மேலும் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஹி லிசாக் (Serhiy Lysak) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இரண்டாவது தாக்குதலில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றும் கல்வி நிறுவனமொன்றும் சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி