உலகம் செய்தி

குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் நட்பு நாடான குவைத் மீது ஈரான் மேற்கொண்டுள்ள முதலாவது தாக்குதலாக இது அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு வாரத்திற்குள் மூன்றாவது தடவையாக ஈரானின் வான்வழித் தாக்குதல்களை இடைமறித்துள்ளதாக பஹ்ரைன் புதன்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், வளைகுடா இராச்சியமான பஹ்ரைனை நோக்கி ஈரான் திட்டமிட்ட வகையில் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைத் தலைமையகம் பஹ்ரைனிலேயே அமைந்துள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தை நிலைகுலையச் செய்துள்ள இந்த மோதல், சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதித்துள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விலைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும், பிராந்தியத்தின் பல நாடுகளையும் இந்த மோதலில் ஈடுபடச் செய்துள்ளது. இந்நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகளும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றன.

எதிரிக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை

குவைத்தில் உள்ள அலி அல் சலேம் (Ali Al Salem) இராணுவத் தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, குவைத்தின் வான் பாதுகாப்புப் படைகள் எதிரி ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடித்து வருவதாக அந்நாடு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கெஷ்ம் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளம் ஒன்றைக் குறிவைத்து அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் இராணுவச் சொத்துகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அமெரிக்காவின் தாக்குதலால் எந்தவொரு உட்கட்டமைப்புக்கும் சேதம் ஏற்படவில்லை என ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி