ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் 45 பில்லியன் யூரோ கடன் வழங்குகிறது EU

ரஷ்யாவின் 2022ஆம் ஆண்டு படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான 70 பில்லியன் யூரோ நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், உக்ரைனுக்கு மேலும் 45 பில்லியன் யூரோ (49.5 பில்லியன் அமெரிக்க டொலர்) கடன் வழங்க ஐரோப்பிய ஆணைக்குழு புதன்கிழமை முன்மொழிந்துள்ளது.

ரஷ்யாவின் 2022ஆம் ஆண்டு படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான 70 பில்லியன் யூரோ நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், உக்ரைனுக்கு மேலும் 45 பில்லியன் யூரோ (49.5 பில்லியன் அமெரிக்க டொலர்) கடன் வழங்க ஐரோப்பிய ஆணைக்குழு புதன்கிழமை முன்மொழிந்துள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷ்யா இழப்பீடு வழங்கிய பின்னரே, உக்ரைன் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அங்கீகாரம் தேவைப்படும் இந்தத் திட்டம், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களால் இணக்கம் காணப்பட்ட 90 பில்லியன் யூரோ கடனுக்கு மேலதிகமானதாகும்.

“இந்த ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமாகி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐரோப்பா ஒன்றுபட்டு நிற்கிறது. போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் நாம் முன்னெப்போதையும் விட உறுதியாக இருக்கிறோம்” என பிரஸ்ஸல்ஸில் ஊடகவியலாளர்களிடம் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான உக்ரைனின் நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்குத் தேவையான எஞ்சிய தொகையை ஏனைய சர்வதேச பங்காளிகள் வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று அமைப்பான ஐரோப்பிய ஆணைக்குழு, முன்மொழியப்பட்டுள்ள கடனில் 25 பில்லியன் யூரோ வரை இராணுவ உதவிகளுக்கும், 20 பில்லியன் யூரோ வரை பொதுமக்கள் நிதிநிலை ஆதரவுக்கும் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தக் கடனுக்கான நிதியைத் திரட்டுவதற்காக, ஐரோப்பிய ஆணைக்குழு சர்வதேச நிதிச் சந்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கடன் பெறவுள்ளது.

இதற்கிடையில், இந்த முன்மொழிவை வரவேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, அடுத்த ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளில் கணிசமான பகுதியை இந்தக் கடன் ஈடுசெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களைக் கொண்ட கவுன்சில் ஆகியவற்றால் இந்தத் தீர்மானம் விரைவாக அங்கீகரிக்கப்படும் என நாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம். அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” என அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி