உலகம்

போர் நிறுத்தத்தை மீறி மீளவும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – 20 பேர் பலி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் மீளவும் தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஒரு துணை மருத்துவர் உட்பட குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகள்” மீது துல்லியமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவித்துள்ளது.

இது ஹமாஸுடனான மூன்று மாத கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் “அப்பட்டமான மீறல்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ந்து கொலை மற்றும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இஸ்ரேல் ஒரு அற்பமான சாக்குப்போக்காக” துப்பாக்கிச் சூட்டைப் பயன்படுத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்