பொழுதுபோக்கு

அந்த படத்தின் ரீமேக் தான் “ஜனநாயகன்“? வெளிவந்த ஆதாரம்

  • November 9, 2025
  • 0 Comments

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் வந்ததில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. மேலும் சர்ச்சைகளையும் சில கதைகளையும் உடன் கொண்டு வருகின்றது. அதாவது ஜனநாயகன் ஆரம்பித்தில் இருந்தே தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற பேச்சு இருக்கிறது. பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி தெலுங்கில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய்க்கு பகவந்த் […]

பொழுதுபோக்கு

ஆரோமலே படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • November 9, 2025
  • 0 Comments

அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ஆம் திகதி வெளிவந்த படம் ஆரோமலே. பிரபல நடிகர் தியாகுவின் மகனான சாரங் தியாகு கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்து, ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 1.9 கோடி வசூல் செய்துள்ளது.

இலங்கை செய்தி

வருடாந்திர வருவாய் இலக்கை அடுத்த 03 நாட்களில் அடையும் பாதையில் இலங்கை சுங்கத்துறை!

  • November 9, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத்துறை, 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர வருவாய் இலக்கை அடுத்த மூன்று நாட்களுக்குள் அடையும் பாதையில் இருப்பதாகக் கூறுகிறது. நவம்பர் 6 ஆம் திகதி, சுங்கத்துறை தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு நாள் வருவாய் 27.7 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்ததாக சுங்க இயக்குநர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், அக்டோபர் 15, 2025 அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வருவாய் ஈட்டியதாகவும்,  அப்போது சுங்கத்துறை 24.4 பில்லியன் ரூபாயைப் […]

விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம்

  • November 9, 2025
  • 0 Comments

ஐசிசி தரவரிசையில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கை அணியின் தொடக்க வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, டி20 துடுப்பாட்ட தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அனுபவ வீரர்களான குசல் ஜனித் பெரேரா 9வது இடத்திலும், குசல் மெண்டிஸ் 18வது இடத்திலும் உள்ளனர். இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க, டி20 பந்துவீச்சுத் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார 6வது இடத்திலும், சுழல் பந்துவீச்சாளர் […]

செய்தி

டென்மார்க்கின் சில பகுதிகளில் கொவிட்-19 பரவல் – சுகாதார கட்டுப்பாடுகள் தீவிரம்

  • November 9, 2025
  • 0 Comments

டென்மார்க்கின் சில பகுதிகளில் கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிங்க் (Mink) பண்ணையில் இருந்து கொவிட்-19 வைரஸ் பரவியதாக சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், ஏழு நகர சபைகளில் சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த நகர சபைகளுக்குமிடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பண்ணையிலுள்ள மிங்க் விலங்குகளையும் அழிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. “கிளஸ்டர் 5” எனப்படும் இந்த மாறுபாடு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த […]

உலகம்

படிம எரிபொருள் பயன்பாட்டால் பூமிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரேசில் ஜனாதிபதி எச்சரிக்கை

  • November 9, 2025
  • 0 Comments

படிம எரிபொருள்களின் பயன்பாடு தொடர்பில் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். படிம எரிபொருள்களின் அதிதீவிர பயன்பாட்டை பூமி நீண்ட காலத்துக்குத் தாங்கிக் கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படிம எரிபொருளை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும் என ஏற்கனவே உலக நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த இணக்கப்பாட்டை விரைந்து அமல்படுத்த வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த 200 ஆண்டுகளாக உலக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் தீவிரம் அடையும் பருவகால காய்ச்சல் – சிறுவர்கள் அதிகளவில் பாதிப்பு

  • November 9, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் பருவகால காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் காரணமாக அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் விரைவாக பருவகால காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் பதிவான நோயாளிகளின் தரவுகளுக்கு அமைய, ஒரு லட்சம் பேருக்கு 16.7 இலிருந்து 20.3 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளது. 1 முதல் 4 வயது […]

இலங்கை

ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் – இராஜதந்திர நகர்வில் புதிய அத்தியாயம்

  • November 9, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கிய இணையதளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரில்வின் சில்வா அண்மையில் மூன்று வாரங்கள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றிருந்தார். அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி இருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்தியா செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. புதுடெல்லி விஜயத்தின்போது அந்தநாட்டு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

  • November 9, 2025
  • 0 Comments

புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் ஒரு நோயெதிர்ப்பு சிகிச்சை முறையை விக்டோரியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் புதிய முறை, புற்றுநோயாளிகளின் இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட நோயெதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்களை அடையாளம் காணவும், குறிவைக்கவும், அழிக்கவும் சிறப்பாக மாற்றியமைக்கப்படுகிறது. டீலி ஆராய்ச்சி மையத்தின் தலைமையிலான இந்த சோதனை, மீசோதெலின் எனப்படும் புரதத்தை குறிவைத்து, உடலின் தேவையற்ற பாகங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சிகிச்சையளிக்க வடிவமைக்கப்பட்ட CAR-T செல்களை உருவாக்கி வருகிறது. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் – உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவு

  • November 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் சிரியாவை சேர்ந்தவர்கள் தஞ்சம் கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். சிரியாவை சேர்ந்த குற்றவாளிகளை முதலில் நாடு கடத்த அரசாங்கம் ஏற்கனவே தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விவாதிக்க சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை ஜெர்மனிக்கு அழைத்ததாகவும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமீபத்தில் சிரியாவுக்கு விஜயம் செய்த வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் மெர்ஸின் கருத்துடன் உடன்படவில்லை. சிரியா இன்னும் பாதுகாப்பற்றது என்றும் […]