கருத்து & பகுப்பாய்வு

விஜய்–ராகுல் கூட்டணி – தமிழக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பும் புதிய வியூகம்!

  • November 16, 2025
  • 0 Comments

தமிழக அரசியலில் பரபரப்பான புதிய திருப்பம் என்றே சொல்ல வேண்டும். நடிகர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு வெற்றிக் கழகம் விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக நிர்வாகிகள் சிலரை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் விரைவில் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் இந்த முக்கிய சந்திப்பு நடைபெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி பற்றிய விஜயின் விருப்பம் தவெக கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே […]

பொழுதுபோக்கு

40 நாட்களுக்கு திவாகர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • November 16, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சுமார் 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதுதான் போட்டி சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோவில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடத்தப்பட்டு போட்டியாளர்கள் குறைக்கப்பட்ட போதும், திடீரென 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே சென்றனர். ஆரம்பத்திலிருந்தே போட்டி சரியில்லை, போட்டியாளர்கள் சரியில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியும் அனைவருக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில், இந்த வாரம் […]

உலகம் செய்தி

சட்டவிரோத குடியேற்றம் – அமெரிக்காவின் வடகரோலினாவில் திடீர் சோதனை!

  • November 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வட கரோலினாவின் (North Carolina) சார்லட்டின் (Charlotte) வங்கி மையத்தில் அமெரிக்க கூட்டாட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனைகளை நடத்தியுள்ளனர். அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அகற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காகவும் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பை மேற்பார்வையிடும் DHS,  செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் (ricia McLaughlin ) ஓர் அறிக்கையில் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் கார் பந்தயத்தில் ஏற்பட்ட அனர்த்தம் – ஆபத்தான நிலையில் மூவர்!

  • November 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். வால்ச்சா (Walcha) நகரில் நேற்று இரவு நடைபெற்ற வருடாந்திர கார் பந்தயத்தின் போது விபத்து நிகழ்ந்துள்ளது. பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று சாலையை விட்டு விலகி பார்வையாளர்கள் குழு மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 13 பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

திடீரென சிறிதாகிய மார்பகம்! பிரபல நடிகைக்கு நடந்தது என்ன?

  • November 16, 2025
  • 0 Comments

மாடல் அழகியும், நடிகையுமான ஷெர்லின் சோப்ரா மார்பக அறுவை சிகிச்சை செய்து தனது மார்பகத்தை பெரிதாக்கி வைத்திருந்தார். இதனால் அவருக்கு நீண்ட காலமாக முதுகு, கழுத்து, மார்பு மற்றும் தோள் வலி காரணமாக தனது மார்பகத்தில் பொருத்தப்பட்டு இருந்த இம்ப்ளாண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தேவையற்ற அதிக சுமையாக இருந்ததால், இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு வெளியான ‘டைம் பாஸ்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், […]

இலங்கை

தேவைக்கு அதிகமாகவே வெளிநாடுகளுக்கு செல்லும் நாடாளுமன்ற அதிகாரிகள்!

  • November 16, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற செயலகத்தின் அதிகாரிகள் தேவைக்கு அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்வதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று  பிற்பகல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சில அதிகாரிகள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், நாட்டின் நலனுக்காக அவர்கள் ஒரு பயனுள்ள திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் திறமையான அதிகாரிகள் இருந்தாலும், பலர் ஒருபோதும் வெளிநாட்டுக்குச் சென்றதில்லை என்றும் சலுகைகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட ஒரு சிறிய குழு அதிகாரிகள் பாராளுமன்றத்தில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இந்த […]

உலகம் செய்தி

தெற்கு எல்லையில் சுவர் எழுப்பும் இஸ்ரேல் – ஐ.நாவிடம் முறையிடும் லெபனான்!

  • November 16, 2025
  • 0 Comments

தெற்கு எல்லையில் இஸ்ரேல் கான்கிரீட் சுவரைக் கட்டுவது குறித்து ஐநா . பாதுகாப்பு கவுன்சிலிடம்  முறைப்பாடு அளிக்கப்போவதாக லெபனான்  நேற்று கூறியுள்ளது. இந்த சுவர் ஐ.நா.வால் வரைபடமாக்கப்பட்ட நீலக் கோட்டைத் தாண்டி நீண்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. லெபனானையும்,  இஸ்ரேலையும் பிரிக்கும் எல்லையை இந்த நீலக் கோடு குறிக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கையானது  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 ஐ மீறுவதாகவும் லெபனான் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா செய்தி தொடர்பாளர் ஒருவர், […]

பொழுதுபோக்கு

வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இப்படி நடக்கும்! மகேஷ் பாபு

  • November 16, 2025
  • 0 Comments

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மகேஷ் பாபு, “இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் இந்தியாவே எங்களை பார்த்து பெருமைப்படும். இது என்னுடைய கனவு திரைப்படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இப்படியான வாய்ப்பு கிடைக்கும். இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். ‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் மாபெரும் பேரணி!

  • November 16, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் சீரற்ற வானிலை காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு அனர்த்த நிலைமைகளுக்கு  முகம்கொடுத்தனர்.  இதில் பலர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் வெள்ளக் கட்டுப்பாட்டு ஊழல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும் எனக் கோரி பிலிப்பைன்ஸ் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று  ஒன்றுக்கூடியியுள்ளனர். மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த பேரணியில்   27000 பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், திட்டங்களில் உள்ள […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

  • November 16, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் புகலிட மாற்றங்களில் முக்கிய திருத்தங்களை உள்துறை செயலாளர்  ஷபானா மஹ்மூத்  (Shabana Mahmood) நாளைய தினம் அறிவிக்கவுள்ளார். புதிய திட்டத்தின்படி, இங்கிலாந்தில் புகலிடம் பெற்றவர்கள் நிரந்தரமாக குடியேற விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. சண்டே டைம்ஸிடம் அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோத குடியேறியாக இந்த நாட்டிற்கு வராதீர்கள், படகில் ஏறாதீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத இடம்பெயர்வு நம் […]